Pages

Thursday, March 31, 2016

ஆர் வி சுவாமிநாதன்


ஆர் வி சுவாமிநாதன் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் உறுப்பினரும் ஆவார். அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் ஆவார்.

அவர் சிவகங்கை (மக்களவைத் தொகுதி) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் 1980 1971 ல் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக மதுரை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு

அவர் 1967 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக 1952 மற்றும் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேர்வு செய்யப்பட்டார் தமிழ்நாடு சிவகங்கை சட்ட மன்ற அவர் 1967,1971,1977 இருந்து மூன்று கால TNCC PRISEDENT இருந்தது.

இவர் நெருக்கமாக மகாத்மா காந்திஜி தொடர்புடையதாக இருந்தது. மகாத்மா காந்திஜி தமிழ் Nadu.in 1933-34 சுற்றுப்பயணம் வந்த போது, அவர் paganeri village.he உள்ள அவரது வீட்டில் இரண்டு முறை தங்கி K.T.kosalram சேர்ந்து ஒரு தனியார் மசோதா R.V.S. பிரபலமாக அறியப்பட்ட இருந்தது சீர்மரபினர் list.he இருந்து தேவர் சமூகத்தின் அகற்றுதல் உதவியளித்த கொண்டு கருவியாக இருந்தது.

Friday, March 25, 2016

என். வி. நடராசன்


என். வி. நடராசன் (என். வி. நடராஜன், ஜூன் 12, 1912 - ஆகஸ்ட் 3, 1975 ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் திராவிட இயக்கத் தலைவர் ஆவார். நடராசன் 1938-49 காலகட்டத்தில் நீதிக்கட்சியின் (1944 முதல் திராவிடர் கழகம்) உறுப்பினராக இருந்தார். 1949ல் கா. ந. அண்ணாதுரை பெரியார் ஈ. வே. ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக தி.கவிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய போது அவருடன் சென்ற தலைவர்களுள் நடராசனும் ஒருவர். நடராசன் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (ஏனைய நால்வர் - அண்ணா, இரா. நெடுஞ்செழியன், கே. ஏ. மதியழகன், ஈ. வே. கி. சம்பத்). 1960 முதல் 1975 வரை திமுகவின் அமைப்புச் செயலாளராக பதவி வகித்தார். 1957 மற்றும் 1962 சட்டமன்றத் தேர்தல்களில் பேசின் பிரிட்ஜ் தொகுதியில் திமுக சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் 1964ல் தமிழக சட்டமன்ற மேலவைக்குத் தெர்ந்தெடுக்கப்பட்டார். 1967ல் திமுக வென்று ஆட்சியமைத்த போது அண்ணாவின் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். 1975ல் இறக்கும் வரை அப்பதவியில் நீடித்தார். அவரது மகன் என். வி. என். சோமு பிற்காலத்தில் திமுக சார்பாக இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூடுதல் செய்திகள்

தி.மு.க.வின் சென்னை மாவட்ட செயலாளராக முதன் முதலில் இருந்தவர்.
தி.மு.க.வின் சட்டத்திட்டங்களை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்ட சட்டத்திட்டத் திருத்தக் குழுவின் முதல் செயலாளர்.
தி.மு.க.வில் மிக நீண்டகாலம் தலைமை நிலையச் செயலாளராக இருந்தவர்.
’திராவிடன்’ என்னும் இதழைத் தொடங்கி நடத்தினார்.
இந்தி எதிர்ப்பு, விலைவாசி உயர்வு எதிர்ப்பு போன்ற பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

Wednesday, March 23, 2016

ஓ. வி. அழகேசன்



ஒழலூர் விசுவநாத முதலியார் அழகேசன் (Ozhalur Viswanatha Mudaliar Alagesan) (6 செப்டம்பர் 1911 – 3 சனவரி 1992)தமிழக அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரருமாவார்.இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும் மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

அரசியல்

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராக 1946ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டுவரை பங்காற்றினார். 1951ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் செங்கல்பட்டு மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அத்தொகுதியில் 1957ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர் 1962ஆம் ஆண்டு அத்தொகுதியில் மீண்டும் வென்றார். 1971ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் திருத்தணி மக்களவைத் தொகுதியிலும் 1975ஆம் ஆண்டு அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலும் வென்றார்.

1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடுவண் அமைச்சரவையில் இருந்து, உணவு அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியனுடன் பதவி விலகி இந்தி திணிப்பிற்கு தமது எதிர்ப்பினை தெரிவித்தார்.

1968 முதல் 1971 வரை எத்தியோப்பியாவிற்கு இந்திய தூதராக பணியாற்றியுள்ளார்.

Sunday, March 20, 2016

இரா. நெடுஞ்செழியன்

இரா. நெடுஞ்செழியன் (சூலை 11, 1920 - சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் "நாவலர்" என்றும் அழைக்கப்படுவார்.


குடும்பம்
பட்டுக்கோட்டையின் அருகேயுள்ள திருக்கனாபுரத்தில் 11-7-1920 ந்தேதி பிறந்தார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும், மதிவாணன் என்னும் மகனும் உள்ளனர். இவரது பேரன் ஜீவன் நெடுஞ்செழியன் இந்திய டென்னிஸ் வீரராக விளங்குகிறார். மருமகள் கல்யாணி மதிவாணன் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக தற்பொழுது இருக்கிறார்.
புகழ்பெற்ற பாராளுமன்ற உறுப்பினரான இரா.செழியன் இவர்தம் தம்பிகளுள் ஒருவர் ஆவார்.

அரசியல்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த இவர், பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். இவ்வியக்கம் நீதிக்கட்சியோடு இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவானபொழுது அதில் தொடர்ந்தார். பேரறிஞர் அண்ணா, 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய போது அக்கட்சியின் ஐம்பெரும் தலைவர்களில் (அண்ணா, ஈ. வெ. கி. சம்பத், நெடுஞ்செழியன், என். வி. நடராசன். க. மதியழகன்) ஒருவராகத் திகழ்ந்தார். 1957 - 62ஆம் ஆண்டுகளில் அக்கட்சியின் இரண்டாவது பொதுச் செயலாளராக பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் 1975ஆம் ஆண்டுவரை மீண்டும் பொதுச் செயலாளராகப் பதவிவகித்தார்.

1975ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்து க. இராசராம் அவர்களுடன் இணைந்து மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டில் அக்கட்சியை அ.தி.மு.க.வில் இணைத்தார். அதன்பின் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராகவும் பொதுச்செயலாளராகவும் சிலகாலம் இருந்தார்.

1987ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். மறைந்தவுடன் அப்போதைய கொள்கைபரப்புச் செயலாளரான ஜெ.ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பாடுபட்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் க.இராசராம், செ. அரங்கநாயகம், பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து அ.தி.மு.க (நால்வர் அணி) என்னும் பிரிவை உருவாக்கினார். அந்த அணியின் சார்பில் அதற்கு அடுத்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதிலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதனால் சிறிதுகாலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார். பின்னர் ஒருங்கிணைந்த அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்து இறுதிவரை அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்தார்.

Wednesday, March 16, 2016

வாழப்பாடி ராமமூர்த்தி


வாழப்பாடி கே ராமமூர்த்தி (1940 - அக்டோபர் 27, 2002) ஒரு தமிழக அரசியல்வாதி. ஆறு முறை இந்திய மக்களவை உறுப்பினராகவும் இரு முறை இந்திய நடுவண் அரசில் ஆய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

1940ல் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்தார் ராமமூர்த்தி. 1959ல் திராவிடர் கழகத்தில் இணைந்தார். அடுத்த ஆண்டே அங்கிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 1968ல் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளரானார். காங்கிரசு கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ. என். டி. யூ. சியின் தலைவராகப் பணியாற்றினார். காங்கிரசின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். ஜி. கே. மூப்பனார் தலைமையிலான காங்கிரசு கோஷ்டிக்கு எதிராக “வாழப்பாடி கோஷ்டி” என்று ஒன்று இவரது தலைமையில் செயல்பட்டது. 1977 பொதுத் தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980, 1984, 1989, 1991 பொதுத் தேர்தலில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1998 தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1991-92ல் பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான நடுவண் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின் காங்கிரசிலிருந்து விலகி திவாரி காங்கிரசில் இணைந்து அதன் தமிழ்நாட்டுத் தலைவராகப் பணியாற்றினார். 1996 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். இத்தேர்தலில் திவாரி காங்கிரசு எத்தொகுதியிலும் வெற்றி பெற வில்லை. பின் 1998 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக ராஜீவ் காங்கிரசு என்ற கட்சியைத் தொடங்கி பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வென்றார். 1998-99ல் அடல் பிகாரி வாச்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1999 பொதுத் தேர்தலில் அதே கூட்டணியில் இடம் பெற்றார் ஆனால் வெற்றி பெற இயலவில்லை. 2001ல் கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் காங்கிரசில் இணைந்து விட்டார். 2002ம் ஆண்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.

காமராசர்



காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் இறந்த பிறகு, 1976 இல் இந்திய அரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Tuesday, March 15, 2016

ஜனா கிருஷ்ணமூர்த்தி


ஜனா கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர். இவர் 2001-2002-ம் ஆண்டு காலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய சட்ட அமைச்சராகவும் இருந்திருக்கிறார். காமராசருக்கு அடுத்து இதுவரை தேசியக் கட்சி ஒன்றிற்கு தலைவராக இருந்த தமிழர் ஜனா கிருஷ்ணமூர்த்தி மட்டுமே.

ஆரம்பகால வாழ்க்கை
கிருஷ்ணமூர்த்தி மதுரையில் பிறந்தவர், இவரது தாய்மொழி தமிழாகும். சென்னை சட்டக்கல்லூரியின் மாணவரான இவர் தனது சட்டப் பயிற்சியை மதுரையில் 1965-ல் மேற்கொண்டார். ஆர்எஸ்எஸ்-ன் அப்போதைய தலைவரான எம். எஸ். கோல்வால்கார் இவரை அரசியலுக்கு அழைத்து வந்தார்.

Monday, March 14, 2016

வரதராஜன் முதலியார்


வரதராஜன் முனிசுவாமி முதலியார் அல்லது வரதா பாய் (1926–1988) தூத்துக்குடியில் பிறந்து மும்பையில் தாதாவாக திகழ்ந்தவராவார். 1970-களில் மிகப்பிரபலமான மாஃப்பியா கும்பலில் இருந்த ஹாஜி மஸ்தானுக்கும் நிகழுலகத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார்.

தொழில்
1960-களில் மும்பை தொடருந்து நிலையத்தில் சுமைதூக்குக் கூலியாக தன்னுடைய ஆரம்ப காலத்தில் வேலை செய்தார். பின்னர், போதை பொருட்கள் கடத்தல் தொழிலும், மக்தா என்னும் சூதாட்டத்திலும் ஈடுபட்டார். இவ்வாறு படிப்படியாக வளர்ந்த வரதராஜன் பின்னர் கூலிக்கு கொலை செய்தல், கொள்ளை மற்றும் கடத்தல் என அனைத்திலும் ஈடுபட்டதின் விளைவாக 1980-களில் மிகப்பெரிய தாதாவாக உருவானார். இவர் 1980-களில், கட்டப் பஞ்சாயத்திலும் ஈடுபட்டார். கரீம் லாலா-விற்கு பிறகு மிகப்பெரிய சமூகவிரோதியாக விளங்கினார். அச்சமயத்தில், கரீம் லாலா, வரதராஜன் மற்றும் ஹாஜி மஸ்தான் ஆகிய மூவரும் மும்பையில் தாதாவாக திகழ்ந்தனர்.

ஆன்மீகம்
மாத்தூங்கா மற்றும் தாராவி பகுதிகளில் அதிகமான ஆதிக்கம் செலுத்தி வந்தார் வரதராஜன். இவர் மாத்தூங்கா பகுதியில் உள்ள கணபதி கோயிலில், விநாயக சதூர்த்தி விழாவை ஆண்டுதோறும் நடத்தி வந்தார்.

மரணம்
1980-களின் பிற்பாதியில் மும்பையில் அதிகப்படியான பஞ்சாலைகள் மூடப்பட்ட பிறகு இவருடைய செல்வாக்கும் குறையத்தொடங்கியது. 1980-களின் இறுதியில், இவர் சென்னைக்குத் திரும்ப வந்தார். 1988-ம் ஆண்டு தன்னுடைய 62-ம் அகவையில் காலமானார்

திரைப்படங்களில்
1987-ம் ஆண்டு, மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான நாயகன் திரைப்படத்தில், வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. கமல் ஹாசன் அக்கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தயவான் என்ற பெயரில் வினோத் கண்ணா நடிப்பில் இந்தியிலும் இப்படம் 21 அக்டோபர், 1988 அன்று வெளியானது.

தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த, அமிதாப் பச்சன் அவருடைய அக்னீபாத் திரைப்படத்திலுள்ள வசனங்கள் வரதராஜ முதலியார் பயன்படுத்தியதில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறினார்.

ஏ. நேசமணி


மார்சல் ஏ. நேசமணி (Marshal A. Nesamony, சூன் 12, 1895 - 1968) தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்ட அரசியல்வாதி. இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் திருவிதாங்கூர் சமத்தானத்துடன் (கேரளா) இருந்த குமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கப் பல போராட்டங்கள் நடத்தி 1956 நவம்பர் 1 இல் குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க தலைமையேற்று பாடுபட்டவர் இவர். இவரை மக்கள் குமரித் தந்தை என்று சிறப்பிக்கின்றனர்.

Saturday, March 12, 2016

ராதிகா குமாரசுவாமி


தேசமான்ய ராதிகா குமாரசுவாமி (பிறப்பு 1953) [1] ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல் கீழ் கொண்டுவர செயலாளர் நாயகம், சிறப்பு பிரதிநிதி 13 வரை பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் ஏப்ரல் 2006 [2 நிலையை நியமித்தார் ஜூலை 2012. இருந்தது ] அவர் செப்டம்பர் 10, 2015 அன்று ஒரு சிவில் பிரதிநிதி என அரசியலமைப்பு சபை (இலங்கை) நியமிக்கப்பட்டார்

ஜேம்ஸ் அப்பாதுரை


சேம்சு அப்பாதுரை (James Appathurai, ஜேம்ஸ் அப்பாதுரை, பிறப்பு: ஆகத்து 7, 1968), ஒரு கனேடிய இதழாளர் ஆவார். தற்போது, மத்திய ஆசியாவிற்கான நேட்டோவின் தலைவரின் சிறப்புப் பிரதிநிதியாகப் பணியாற்றுகிறார்.

இவர் கனடாவின் ரொறன்ரோவில் பிறந்தவர். ஆம்ஸ்டர்டாம், ரொறன்ரோ பல்கலைக்கழகங்களில் பயின்றவர்.

நேட்டோவில் சேரும் முன்பே, கனடாவின் இராணுவத் துறையில் சார்ந்த கனேடிய ஒலிபரப்புப் கூட்டுத்தாபனத்தில் இதழாளராகப் பணியாற்றினார்.

Friday, March 11, 2016

அரி ரங்க கோவிந்தசாமி பிள்ளை


அரி ரங்க கோவிந்தசாமி பிள்ளை (தமிழ்: அரி ரங்க கோவிந்தசாமி பிள்ளை; பிறந்தது 14 ஜூன் 1945). மொரிஷியஸ் தலைமை நீதிபதி 1996 முதல் 2007 ல், அவர் ஒய் கே ஜெ யுங்க் சிக் யோன் மூலம் வெற்றி போது வரை இருந்தது.

அவர் பொருளியல் மற்றும் அரசியல் விஞ்ஞானம் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் லண்டன் பள்ளியில் அவர் சட்டவியல் ஒரு B.A 1971 இல் பட்டம் பெற்ற, மெர்ட்டான் கல்லூரி, ஆக்ஸ்போர்டு சட்டம் பயின்றார், அதன் பிறகு ஒரு B.Sc (இகான்) பட்டம், பெற்று, 1966 ஆம் ஆண்டு முதல் 1969 வரை படித்தார். அவர் மொரிஷியஸ் திரும்பிய 1972 இல் லிங்கன் ஒரு விடுதியின், லண்டன் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டார் அவர் சட்டப் பயிற்சி மற்றும் 1987 வரை மொரிஷியஸ் உள்ள அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மற்றும் நீதி அமைச்சு ஒரு சட்ட ஆலோசகராக பணியாற்றினார் மற்றவர்களை முதல்வர் மத்தியில், பல நியமனங்கள் நடைபெற்றது கிரவுன் கவுன்சில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் சட்டமா அதிபர் அலுவலகத்தில் பாராளுமன்ற ஆலோசகர் மற்றும் நீதி அமைச்சு.

அவர், பதவியில் தாழ்ந்த நீதிபதி பின்னர் நியமிக்கப்பட்டார் 1 ம் தேதி முதல் 1996 ஆம் 1987 ல் இருந்து நடிப்பு மொரிஷியஸ் உச்ச நீதிமன்ற மூத்த பதவியில் தாழ்ந்த நீதிபதி மே 1996 அவர், மொரிஷியஸ் தலைமை நீதிபதி நியமனம் 2007 ஆம் ஆண்டு ஜூன் 13 ம் தேதி ஓய்வு பெற்ற 2001 ஆம் ஆண்டு நவம்பரில், அவர் தெரிவு செய்யப்பட்டார் லிங்கன் ஒரு விடுதியின் மதிப்புறு Bencher.

அவர் மொரிஷியஸ் நீதித்துறை சட்டம் சேவை ஆணைக்குழுவின் தலைவர் ஆவார். அவர் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை குழுவின் உறுப்பினரான அத்துடன் ஜனநாயகம், மனித உரிமைகள் ஆய்வுகளுக்கான ஆப்பிரிக்க மையம் ஆளும் குழுவிற்கு நியமிக்கப்பட்ட ஆலோசகர் உள்ளது.

Thursday, March 10, 2016

அங்கிடி செட்டியார்


(29 ஏப்ரல் 1928 - 15 செப்டம்பர் 2010) செப்டம்பர் 2010 ல் ஆகஸ்ட் 2007 மொரிஷியஸ் துணை ஜனாதிபதி பணியாற்றிய தனது மரணம் வரை ஒரு மொரீஷியஸ் அரசியல்வாதி ஆவார்.

அங்கிடி செட்டியார், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை ல் பிறந்தார், அவர் தமிழ் செட்டியார் சமூகம், இங்கே கிளிக் செய்யவும். அவர் தனது குடும்பத்தை வர்த்தகர்கள் இருந்தன 10 வது வயதில் மொரிஷியஸ் வந்தது. அங்கிடி செட்டியார் தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் மொரிஷியஸ் தொழிற் கட்சி ஒரு தீவிர உறுப்பினராக இருந்தார். அவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி பணியாற்றினார் மற்றும் ஒரு சில தசாப்தங்களாக கட்சியின் பொருளாளர் பதவியை வகித்தவர். மொரிஷியஸ் குறிக்கப்பட்ட துணைத் தலைவராக முன், அங்கிடி செட்டியார் 1980 முதல் 1982 வரை பிரதம மந்திரி சர் Seewoosagur Ramgoolam அரசின் அமைச்சர் அரசாங்கத்தின் பிரதம கொரடா பணியாற்றினார் இறுதியில், பல ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

அவர் 1997 முதல் 2002 வரை துணை ஜனாதிபதி போன்ற ஒரு முதல் பதவியில் மற்றும் அவர் சுருக்கமாக Cassam Uteem ராஜினாமா போது 2002 ஆம் ஆண்டு ஜனாதிபதி நடிப்பு ஆனார். எனினும், செட்டியார் நாட்களுக்குள் ஒரு சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் கையெழுத்திட மறுத்த பிறகு, மசோதா முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சமான என்று கூறி ராஜிநாமா செய்தார். அடுத்தடுத்து வரி பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதி Ariranga பிள்ளை ஜனாதிபதி நனைத்த.

ஆட்சிக்கு நவீன் Ramgoolam, மொரிஷியஸ் தொழிற் கட்சியின் தலைவர் வந்து மீண்டும் பிறகு, செட்டியார் மொரிஷியஸ் துணை ஜனாதிபதி போன்ற மொரிஷியஸ் ஜனாதிபதி, Anerood Jugnauth மூலம் இரண்டாவது முறையாக, 2007 ல் நியமிக்கிறேன்.

 அவர் தன்னுடைய மரணத்திற்கு முன்பு ஒரு சில மாதங்களுக்கு சுகாதார பிரச்சினைகள் அவதிப்பட்டார் செப்டம்பர் 2010 15 ம் தேதி துணை ஜனாதிபதி பணியாற்றினார் போது இறந்தார். அவர் நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மற்றொரு மகன் ஏற்கனவே இறந்துவிட்டார்.

Wednesday, March 9, 2016

வீராசாமி ரிங்காடு


சர் வீராசாமி ரிங்காடு (Veerasamy Ringadoo, 20 அக்டோபர் 1920 – 9 செப்டம்பர் 2000) மொரிசியசு நாட்டின் ஆளுனராக 1986 முதல் 1992 ஆம் ஆண்டு குடியரசு ஆகும் வரையில் பதவியில் இருந்தவர். ரிங்காடு மொரிசியசின் குடியரசுத் தலைவராக 1992 பிற்பகுதி வரை பதவியில் இருந்தார். தமிழரான வீராசாமி இந்து மதத்தவர்.1937 ஆம் ஆண்டில் தமிழர் கூட்டமைப்பு (League of Tamils) என்ற அமைப்பை ஆரம்பித்தார்.

வீராசாமி மொரிசியசு நாட்டின் நிதி அமைச்சராகப் பதவியில் இருந்த போது 1975 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

Tuesday, March 8, 2016

ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்


ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.

கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.

கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார். அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, கருணை மனுக்களின் மீது முடிவேதும் எடுக்காமல் இருந்த காரணத்தால், குற்றவாளிகளின் மீதான நடவடிக்கைகள் கால தாமதம் ஆகியதற்காக, விமர்சிக்கப்பட்டுள்ளார்.

ரா. வெங்கட்ராமன்


இரா. வெங்கட்ராமன் (டிசம்பர் 2, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். இவர் 1987 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இந்திய அரசியலில் நெருக்கடியான காலகட்டம். இலங்கைச் சிக்கல், போபர்ஸ் ஊழல், ராஜீவ் காந்தி படுகொலை, பங்குசந்தை ஊழல் என பல்வேறு சிக்கல்களில் நாடு சிக்கியிருந்த ஐந்தாண்டுகளில் பிரதமர்களுடன் பணியாற்றியவர். பாக்கித்தானுக்கு பயணம் செய்த முதல் இந்தியக் குடியரசுத் தலைவர். அதற்கு முன் நான்கு ஆண்டுகள் துணைக் குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். பல அமைச்சர் பதவிகளையும் வகித்து இருக்கின்றார்.

Monday, March 7, 2016

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (Sarvepalli Radhakrishnan,) 5 செப்டம்பர் 1888 – 17 ஏப்ரல் 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவஞானியும் ஆவர்.

இளமைக் காலம்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்.இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி, தாயார் பெயர் சீதம்மா.இவர், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

இல்லற வாழ்க்கை
இராதாகிருஷ்ணன் தன்னுடைய தூரத்து உறவினரான சிவகாமு, என்பவரை தம்முடைய 16-ம் அகவையில் மணம் புரிந்தார். இது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டத் திருமணமாகும். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று தொடர்பான துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு 1956-ம் ஆண்டு இறந்தபோது இராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.

அரசியல் நிலைபாடுகள்
1938 ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி உயர் நிலைப் பள்ளிகளில் இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என அறிவித்த போது, அந்த அறிவிப்பை வலுவாக எதிர்த்த சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். 1965 ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து மத்திய அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ. வி. அழகேசன் பதவியை ராஜினாமா செய்தார்கள்.இந்தி ஆட்சி மொழிக்கு ஆதரவான பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இவ்விரு அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் அதனை குடியரசுத்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் ஏற்க மறுத்தார்.

ஆசிரியப் பணி
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயின்றவர்.
இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Sunday, March 6, 2016

வீ. தி. சம்பந்தன்

துன் வீராசாமி திருஞான சம்பந்தன் (பிறப்பு:ஜூன் 16, 1919 - இறப்பு:மே 18, 1979) மலேசிய இந்திய காங்கிரசின் (MIC) 5-ஆவது தலைவர்.[1] மலேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகளில், அமைச்சர் பதவி வகித்திருக்கிறார்[2]. மலேசிய இந்தியச் சமுதாயத்தின், தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர். மலேசியாவின் உயரிய, துன் விருதைப் பெற்ற முதல் தமிழர்.

அரசியலில் செல்வந்தனாக நுழைந்து, ஏழையாகி விலகிச் சென்றவர்[சான்று தேவை]. தன்னுடைய பணம், பொருள், செல்வம், குடும்பச் சொத்துகள் அனைத்தையும், மலேசிய இந்திய மக்களுக்காக அர்ப்பணிப்பு செய்தார். மலேசியாவின் காமராசர் என்று மலேசியத் தமிழர்களால் புகழப் படுகிறார். மலாயா சுதந்திரம் அடைவதற்கு, இந்திய மக்களின் பிரதிநிதியாக இலண்டன் சென்று சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டு வந்த தலைவர்களில், துன் சம்பந்தனும் ஒருவர் ஆவார்

தில்லையாடி வள்ளியம்மை


தில்லையாடி வள்ளியம்மை (பெப்ரவரி 22, 1898 - பெப்ரவரி 2, 1914) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு பெண் போராளி.
தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898 ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி, மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். நெசவுத் தொழிலாளியான முனுசாமி, பிரித்தானிய ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகன்ஸ்பர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார்.
தில்லையாடி காந்தி நினைவுத் தூண்
1913 -ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தென்னாப்பிரிவிக்காவில் வசித்து வந்த இந்தியர்களுக்கு பிரித்தானியர்களால் விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து நடத்திய அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகத் துணிந்து போராடினார். 1913 -ஆம் ஆண்டு திசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்ட போதும் போராட்டக் குழுவினரின் கோரிக்கை நிறைவேறாத நிலையில் வெளியே வர மறுத்து, பின்னர் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி இரத்தான பின்பே விடுதலையை ஏற்று வெளியே வந்தார். பதினாறே ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை "பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என காந்தி பாராட்டியுள்ளார்.

Friday, March 4, 2016

ஆர். கே. சண்முகம் செட்டியார்



சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் (அக்டோபர் 17, 1892 – மே 5, 1953) இந்தியப் பொருளாதார நிபுணர். இந்தியாவின் போற்றத்தக்க பாராளுமன்ற வாதி, சிறந்த பேச்சாளர், தமிழிசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்தவர்.


இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் முதல் தமிழ் சபாநாயகர்
1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடையவர். நாட்டுப் பிரிவினை போது எழுந்த கணக்கு பிணக்குகளுக்கு சரியான முடிவு கண்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு
தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில் பல தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களான வாணிய செட்டிக் குடும்பத்தில் ஆர். கந்தசாமி செட்டியார் - ஸ்ரீரங்கம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சண்முகனாருடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள்.

கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றார். பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். மிகக் குறுகிய காலமே வழக்குரைஞராகப் பணியாற்றி, பின்னர் பொதுவாழ்வில் ஈடுபட்டார்.

பொதுப்பணி
ஆர்.கே.எஸ்., பொது வாழ்வில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். கோவை நகர் மன்ற உறுப்பினராகவும், நகர் மன்றத் துணைத் தலைவராகவும், சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராவும், இந்திய தேசிய சட்ட சபையின் (அன்றைய பாராளுமன்றம்) உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றினார்.

சர் ஆர்.கே.சண்முகம் செட்டி 1920-இல் அன்னி பெசன்ட் அம்மையாருடன் சில மாதங்கள் இங்கிலாந்து சென்று பல பொதுக் கூட்டங்களில் உரையாற்றி, இந்திய சுயாட்சிக்காக தமது கருத்துகளை வெளியிட்டார்.

கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்தார்
1931 முதல் 1945 வரை கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்மை மேம்பட்டது. அவரது கண்காணிப்பில் கொச்சி அரசின் தலைமையகம் நவீனப்படுத்தப்பட்டது.

1929 இல் பன்னாட்டு தொழிலாளர் நிறுவன மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார். 1923 முதல் 1929 வரை மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக இருந்தார். அந்த அவையின் துணைத்தலைவராக 1931-33 ஆண்டுகளிலும், தலைவராக 1933-34களிலும் பதவியில் இருந்தார். 1938 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உலகநாடுகள் சங்க (League of Nations) கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பாக சென்றிருந்தார். 1944 ஆம் ஆண்டு பிரெட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார். 1945 ஆம் ஆண்டு மன்னர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பங்கேற்றார்.

கொறடாவாக ஆர்.கே.சண்முகம்
நாடாளுமன்றத்தின் சுயராஜ்யக் கட்சியின் (காங்கிரஸ்) தலைவராக நேருவும், செயலாளராக சித்தரஞ்சன் தாசும், கொறடாவாக ஆர்.கே.சண்முகனாரும் பணியாற்றிச் சிறப்பித்தனர்.

இந்தியாவிலுள்ள மிகப்பெரிய நூலகங்களில் ஒன்று
இளம் வயதிலேயே பல மொழிகளைக் கற்றறிந்தார். கோவை மாநகரில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் இருந்த இவரது ஹவார்டன் எனும் இவரது இல்லத்திலிருந்த நூலகம் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய நூலகங்களில் ஒன்று.

இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர்
இந்திய தேசிய சட்ட சபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பெருமைக்குரியவர்.

அவர் போராட்டங்களின்றி சட்டவழியே தன்னாட்சி மற்றும் விடுதலை பெறுவதை விரும்பினார். அவர் நீதிக்கட்சியில் சிலகாலம் உறுப்பினராக இருந்தார். பின்னர் சுதந்திராக் கட்சியின் முதன்மை கொறடாவாகவும் இருந்தார்.

இந்திய விடுதலையின்போது "உலக நிகழ்வுகளின் முதன்மைக் காரணத்தாலும், இதுவரை ஆட்சி புரிந்தவர்களின் பெருந்தன்மையான விட்டுக்கொடுத்தலினாலும் வெளிநாட்டு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம் " என்று கூறியுள்ளார்.

1941-இல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் நிரந்தர வர்த்தகப் பிரதிநிதியாக ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளைத் தோற்றுவிக்க இவர் ஆற்றிய பணிகள் பல.

மகாத்மா காந்தியின் விருப்பப்படி முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்
1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், மகாத்மா காந்தியின் விருப்பப்படி முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். உலகப் போரின் பின்னர் பெரும் பொருளாதார வீழ்ச்சி அடைந்த அந்தக் கால கட்டத்தில் உலக வரலாற்றில் இந்தியப் பிரிவினையின் காரணத்தால் நடைபெற்ற மிகப்பெரிய மதக் கலவரங்கள், இனப் படுகொலைகள், பலகோடி மக்களின் இடமாற்றம், இவற்றால் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளித்து, சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்தும் பெரும்பணி ஆர்.கே.எஸ். மீது சுமத்தப்பட்டது.

வாதத் திறமையால் மீட்டெடுத்தார்
விடுதலைக்குப் பின் பிரித்தானிய இந்தியாவிடம் மாட்டிக்கிடந்த பல நூறு கோடி ரூபாய் அந்நியச் செலாவணியையும், தங்க இருப்பையும் தமது வாதத் திறமையால் மீட்டெடுத்தார். இருப்பினும் இவரது அமைச்சின் அதிகாரி ஒருவரின் விதிமீறல்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவியை துறந்தார். இவரையடுத்துப் பதவியேற்ற ஜான் மத்தாய் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு அவர் தவறு செய்யவில்லை; தவறிழைக்கப்பட்டார் ("he is more sinned against than sinning.") எனக் கூறினார்.

1952 ஆம் ஆண்டு சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கா. ந. அண்ணாதுரை


காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

செல்லப்பன் ராமநாதன்


எஸ். ஆர். நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் (பி. ஜூலை 3, 1924) சிங்கப்பூரின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் செப்டம்பர் 1, 1999 முதல் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 18 2005 அன்று மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 இல், அவர் சிங்கப்பூரின் நீண்ட காலம் சேவை செய்த தலைவர் ஆகினார் . அவரது அலுவலக காலம் ஆகஸ்ட் 31, 2011 அன்று முடிவடைந்தது.

நாகப்பன் படையாட்சி


சாமி நாகப்பன் படையாட்சி (Sammy Nagappan, 1891 - 1909) தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சத்தியாகிரகப் போராட்டத் தியாகி.
சாமி நாகப்பன் தமிழ்நாட்டில் இன்றைய நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஒரு கிராமத்தில் 1891ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தோற்றம், பிறந்த ஊர் பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை. ஆனால் 1800களில் இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு கூலி தொழிலாளியாக அழைத்து செல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர். நாகப்பன் 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டுக் காலமானார்.

திருப்பூர் குமரன்

திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 11 இல் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன்[2] . இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

செண்பகராமன் பிள்ளை


செண்பக்கு, ஜெய்கிந்து செண்பகராமன், மாவீரர் செண்பகராமன் என்று எல்லாம் அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை (Chempakaraman Pillai, பிறப்பு: செப்டம்பர் 15, 1891– மே 28, 1934) தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார். இங்கிலாந்து, செர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார். இட்லர், கெயிசர் ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டவர். இந்தியாவிற்கு வெளியே இருந்து கொண்டே பிரித்தானியரை நாட்டிலிருந்து வெளியேற்றப் பாடுபட்டவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர்.

ப. ஜீவானந்தம்

ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.

கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.

வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டத்தார் - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.

இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மா காந்தியின் கொள்கைகள். அந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார். நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார். அந்தக் கவிதை காந்தியையும், கதரையும் பற்றியது.

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார். "ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார். காந்திய வெளியீடுகளைப் படித்தார்.

ஜீவானந்தம், அரசியலில் எதிரணியில் இருந்த காமரஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இந்திய சுதந்திரத்திற்குப் பிற்காலங்களில் உடுத்த மாற்றுடை இல்லாத வறுமை நிலையிலும் வாழ்ந்தவர்.

சுப்பிரமணிய சிவா


சுப்பிரமணிய சிவா (4 அக்டோபர் 1884 - 23 ஜூலை 1925) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்; 1913-இல் 'ஞானபாநு' இதழை நடத்தியவர். விடுதலைப்போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனாருடனும் மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் 'வீரமுரசு' எனப் புகழப்பட்டார்.

திரு. வி. கலியாணசுந்தரனார்


திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953[1]) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்

காஞ்சிபுரம் மாவட்டத்துச் சைதாப்பேட்டை வட்டத்துத் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.

கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்

சுப்பிரமணிய பாரதி

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921)[2], ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரை பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்[3]. தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆன்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.[4]

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாக கருதினார்.

சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882ல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார் [6]. 1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.

தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.

பாரதி, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.

வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[1] ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.

இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.