Pages

Tuesday, March 15, 2016

ஜனா கிருஷ்ணமூர்த்தி


ஜனா கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர். இவர் 2001-2002-ம் ஆண்டு காலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய சட்ட அமைச்சராகவும் இருந்திருக்கிறார். காமராசருக்கு அடுத்து இதுவரை தேசியக் கட்சி ஒன்றிற்கு தலைவராக இருந்த தமிழர் ஜனா கிருஷ்ணமூர்த்தி மட்டுமே.

ஆரம்பகால வாழ்க்கை
கிருஷ்ணமூர்த்தி மதுரையில் பிறந்தவர், இவரது தாய்மொழி தமிழாகும். சென்னை சட்டக்கல்லூரியின் மாணவரான இவர் தனது சட்டப் பயிற்சியை மதுரையில் 1965-ல் மேற்கொண்டார். ஆர்எஸ்எஸ்-ன் அப்போதைய தலைவரான எம். எஸ். கோல்வால்கார் இவரை அரசியலுக்கு அழைத்து வந்தார்.

No comments:

Post a Comment