இரா. நெடுஞ்செழியன் (சூலை 11, 1920 - சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் "நாவலர்" என்றும் அழைக்கப்படுவார்.
குடும்பம்
பட்டுக்கோட்டையின் அருகேயுள்ள திருக்கனாபுரத்தில் 11-7-1920 ந்தேதி பிறந்தார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும், மதிவாணன் என்னும் மகனும் உள்ளனர். இவரது பேரன் ஜீவன் நெடுஞ்செழியன் இந்திய டென்னிஸ் வீரராக விளங்குகிறார். மருமகள் கல்யாணி மதிவாணன் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக தற்பொழுது இருக்கிறார்.
புகழ்பெற்ற பாராளுமன்ற உறுப்பினரான இரா.செழியன் இவர்தம் தம்பிகளுள் ஒருவர் ஆவார்.
அரசியல்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த இவர், பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். இவ்வியக்கம் நீதிக்கட்சியோடு இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவானபொழுது அதில் தொடர்ந்தார். பேரறிஞர் அண்ணா, 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய போது அக்கட்சியின் ஐம்பெரும் தலைவர்களில் (அண்ணா, ஈ. வெ. கி. சம்பத், நெடுஞ்செழியன், என். வி. நடராசன். க. மதியழகன்) ஒருவராகத் திகழ்ந்தார். 1957 - 62ஆம் ஆண்டுகளில் அக்கட்சியின் இரண்டாவது பொதுச் செயலாளராக பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் 1975ஆம் ஆண்டுவரை மீண்டும் பொதுச் செயலாளராகப் பதவிவகித்தார்.
1975ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்து க. இராசராம் அவர்களுடன் இணைந்து மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டில் அக்கட்சியை அ.தி.மு.க.வில் இணைத்தார். அதன்பின் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராகவும் பொதுச்செயலாளராகவும் சிலகாலம் இருந்தார்.
1987ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். மறைந்தவுடன் அப்போதைய கொள்கைபரப்புச் செயலாளரான ஜெ.ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பாடுபட்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் க.இராசராம், செ. அரங்கநாயகம், பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து அ.தி.மு.க (நால்வர் அணி) என்னும் பிரிவை உருவாக்கினார். அந்த அணியின் சார்பில் அதற்கு அடுத்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதிலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதனால் சிறிதுகாலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார். பின்னர் ஒருங்கிணைந்த அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்து இறுதிவரை அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்தார்.

No comments:
Post a Comment