Pages

Sunday, March 6, 2016

வீ. தி. சம்பந்தன்

துன் வீராசாமி திருஞான சம்பந்தன் (பிறப்பு:ஜூன் 16, 1919 - இறப்பு:மே 18, 1979) மலேசிய இந்திய காங்கிரசின் (MIC) 5-ஆவது தலைவர்.[1] மலேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகளில், அமைச்சர் பதவி வகித்திருக்கிறார்[2]. மலேசிய இந்தியச் சமுதாயத்தின், தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர். மலேசியாவின் உயரிய, துன் விருதைப் பெற்ற முதல் தமிழர்.

அரசியலில் செல்வந்தனாக நுழைந்து, ஏழையாகி விலகிச் சென்றவர்[சான்று தேவை]. தன்னுடைய பணம், பொருள், செல்வம், குடும்பச் சொத்துகள் அனைத்தையும், மலேசிய இந்திய மக்களுக்காக அர்ப்பணிப்பு செய்தார். மலேசியாவின் காமராசர் என்று மலேசியத் தமிழர்களால் புகழப் படுகிறார். மலாயா சுதந்திரம் அடைவதற்கு, இந்திய மக்களின் பிரதிநிதியாக இலண்டன் சென்று சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டு வந்த தலைவர்களில், துன் சம்பந்தனும் ஒருவர் ஆவார்

No comments:

Post a Comment