ஒழலூர் விசுவநாத முதலியார் அழகேசன் (Ozhalur Viswanatha Mudaliar Alagesan) (6 செப்டம்பர் 1911 – 3 சனவரி 1992)தமிழக அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரருமாவார்.இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராகவும் மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
அரசியல்
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினராக 1946ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டுவரை பங்காற்றினார். 1951ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் செங்கல்பட்டு மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அத்தொகுதியில் 1957ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர் 1962ஆம் ஆண்டு அத்தொகுதியில் மீண்டும் வென்றார். 1971ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் திருத்தணி மக்களவைத் தொகுதியிலும் 1975ஆம் ஆண்டு அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலும் வென்றார்.
1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடுவண் அமைச்சரவையில் இருந்து, உணவு அமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியனுடன் பதவி விலகி இந்தி திணிப்பிற்கு தமது எதிர்ப்பினை தெரிவித்தார்.
1968 முதல் 1971 வரை எத்தியோப்பியாவிற்கு இந்திய தூதராக பணியாற்றியுள்ளார்.
No comments:
Post a Comment